ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் குறைந்த பந்துகளில் சதம் அடித்த வீரர் என்ற சாதனையை நியூசிலாந்தின் கோரி அண்டர்சன் படைத்துள்ளார்.
இதற்கு முன்னதாக ஒரு நாள் போட்டியில் குறைந்த பந்துகளில் சதமடித்து சாதனை படைத்திருந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சயித் அப்ரிடியின் சாதனையை நியூசிலாந்து வீரர் அண்டர்சன் முறியடித்துள்ளார்.
மேற்கு இந்திய தீவுக்கு எதிரான 3வது ஒரு நாள் போட்டியில் 36 பந்துகளில் சதமடித்து இந்த சாதனையை அண்டர்சன் படைத்துள்ளார்.
முன்னதாக 1996ல் இலங்கைக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் பாகிஸ்தான் வீரர் அப்ரிடி 37 பந்துகளில் அதிவேக சதமடித்ததே இதுவரை உலக சாதனையாக இருந்தது.





