சிறை அதிகாரியின் வாகனத்தை பயன்படுத்தி தப்பியோடிய சிறைக் கைதிகள்!!

542

Jailமகர சிறைச்சாலையின் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இரண்டு கைதிகள் சிறைசாலை அதிகாரி ஒருவரின் முச்சக்கர வண்டியை பயன்படுத்தி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

கொழும்பு தெமட்டகொட பிரதேசத்தை சேர்ந்த போதைப் பொருள் விற்பனையுடன் சம்பந்தப்பட்ட கைதியும் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய கைதியும் இவ்வாறு தப்பிச் சென்றுள்ளனர்.

நீதிமன்றத்தினால் இவர்கள் இருவருக்கும் தண்டனை விதிக்கப்பட்டிருந்து.

தப்பிச் சென்ற போதைப் பொருள் விற்பனையுடன் தொடர்புடைய குற்றவாளி மிகவும் சிரமப்பட்டு கைது செய்யப்பட்டவர் என்பதால், கடும் பாதுகாப்பில் அந்த நபர் வைத்திருக்கப்பட வேண்டும் என சிறைச்சாலைகள் ஆணையாளர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியிருந்தார்.

இந்த கைதிகள் நேற்று முன்தினம் மதியம் 2 மணிக்கு தப்பிச் சென்றிருந்ததுடன் அவர்கள் தப்பிச் சென்றது குறித்த தகவல் மாலை 4 மணிக்கே அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் சிறைச்சாலைகள் ஆணையாளர் சந்திரரத்ன பல்லேகமவின் உத்தரவின் பேரில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.