புதுவருட கொண்டாட்ட தினத்தை முன்னிட்டு கொழும்பு ஹில்டன் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் விசேட பிரமுகர்களின் மேடை சரிந்து விழுந்ததுள்ளமையினால் பலர் காயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவத்தினால் ஹோட்டலிலில் எல்லா இடங்களிலும் இரத்தம் சிந்திக்கிடந்தது.
நேற்றிரவு நடத்தப்பட்ட புதுவருட விருந்துபசாரத்தின் போதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. இந்த விருத்துபசாரத்தில் ஜனாதிபதியின் மகனும் இன்னும் பல முக்கியஸ்தர்களும் அமர்ந்திருந்த மேடையே இவ்வாறு உடைந்து வீழ்ந்துள்ளது.
இதனால் கேளிக்கைகளில் ஈடுபட்டிருந்த பலர் காயமடைந்தனர்.
இந் மேடையில் சுமார் 200 பேர் வரையிலும் இருந்ததாக ஹோட்டல் நிர்வாகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.