அவுஸ்திரேலியாவிலிருந்து அதிரடியாக நாடுகடத்தப்படவுள்ள இலங்கை தமிழ்க் குடும்பம்!!

663

தமிழ்க் குடும்பம்

அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரிய தமிழ் குடும்பம் ஒன்று அ திரடியாக நாடு க டத்தப்படவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. பிரியா – நடேசலிங்கம் தம்பதியரும் அவர்களுக்கு அவுஸ்திரேலியாவில் பிறந்த இரண்டு பெண் குழந்தைகளும் இவ்வாறு நாடு க டத்தப்படவுள்ளனர்.

நான்கு பேரையும் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு வான்களில் மெர்பேர்ன் விமான நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரி பல போ ராட்டங்களை மேற்கொண்ட போதும் எந்த வெற்றியும் கிடைக்காத நிலையில், இலங்கை அகதிகள் இரகசியமான முறையில் நாடு க டத்தப்படுவதாக அவர்களுக்கு நெருக்கமான நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த வருடம் Biloela உள்ள அவர்களது வீட்டில் மேற்கொள்ளப்பட்ட வைத்து கைது செய்யப்பட்ட தமிழ் குடும்பம் அங்குள்ள தடுப்பு நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

இவர்களை நாடு க டத்த வேண்டாம் என அவுஸ்திரேலியாவின் பல்வேறு பகுதிகளில் போ ராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. எனினும் இன்றிரவு அவர்கள் நாடு க டத்தப்படுவதற்காக விமான நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்னர்.

இரகசிய நாடு  கடத்தலை அறிந்து கொண்ட பெருமளவு அவுஸ்திரேலியர்கள் மெல்பேர்ன் விமான நிலையத்தை மு ற்றுகையிட்டுள்ளதாக தெரிய வருகிறது. நடத்தப்பட்ட சோதனையின் போது, கைது செய்யப்பட்ட இந்த குடும்பத்தினர், 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் மெல்பேர்ன் தடுப்பு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டனர்.