ஆனையிறவில் தாய்க்கும் சிசுவுக்கும் எமனாக வந்த டிப்பர் வாகனம்!!

654

Accidentஆனையிறவுப் பகுதியில் ஏ–9 வீதியில் இன்று இடம்பெற்றுள்ள விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.

இவ்விபத்தில் முக்கொம்பன் பூநகரி பகுதியைச் சேர்ந்த செந்தூரன் சுலோகினி (22), செந்தூரன் கின்சிலி ( பிறந்து 27 நாட்களேயான சிசு) ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர் என கிளிநொச்சி பொலிஸார் குறிப்பிட்டனர்.

இவ்விபத்தில் படுகாயமடைந்த நிலையில் கணவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆனையிறவுப் பகுதியில் அமைந்துள்ள தேவாலயம் ஒன்றுக்குச் சென்று புதுவருட ஆராதனைகள் முடிந்த பின்னர் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

வீதியில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, பின்னால் வந்த டிப்பர் வாகனம் ஒன்று இவர்கள் மீது மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக கிளிநொச்சிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.