அதிரடியாக வெளியாகவுள்ள பாட்ஷா பாகம் – 2!!

538

Bashaரஜினியை வைத்து பாட்ஷா படத்தின் 2–ம் பாகத்தை எடுக்க முயற்சிப்பதாக இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா தெரிவித்தார். பாட்ஷா முதல் பாகம் படம் 1995ல் வெளியானது.

இதில் ரஜினி ஜோடியாக நக்மா நடித்து இருந்தார். சுரேஷ் கிருஷ்ணாவே கதை, திரைக்கதை எழுதி இப்படத்தை இயக்கினார்.
தங்க மகன், நான் ஆட்டோக்காரன், அழகு அழகு, ரா ரா ராமையா, பாட்ஷா பாரு போன்ற இனிமையான பாடல்கள் இப்படத்தில் இடம் பெற்று இருந்தன.

தமிழகம் முழுவதும் வசூலை வாரி குவித்தது. இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் ரஜினி நடிக்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் ஆர்வப்பட்டனர். ஆனால் ரஜினி வேறு படங்களில் பிசியாக நடித்ததால் பாட்ஷா 2ம் பாகத்துக்கான முயற்சிகள் நடக்கவில்லை.

ஆனால் தற்போது இயக்குனர் சுரேஷ்கிருஷ்ணா இதற்கான வேலைகளை ஆரம்பித்து உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது..

ரஜினிக்கும் எனக்கும் பாட்ஷா முக்கியமான படம். எனவே இதன் 2ம் பாகத்தை எடுக்க விரும்பினேன். இது குறித்து ரஜினியிடம் பல தடவை பேசி உள்ளேன். பாட்ஷா படம் போல் இரண்டாம் பாகம் ஹிட்டாகுமா என்ற சந்தேகம் அவருக்குள் இருக்கிறது.

முயற்சியை நான் கைவிட்டு விடவில்லை. பாட்ஷா 2ம் பாகத்தை எடுப்பது குறித்து ரஜினியிடம் தொடர்ந்து பேசிவருகிறேன். அந்த படம் நல்லா வரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்று அவர் கூறினார்.