வவுனியாவில் போதிய மழையின்மையால் நெற்பயிர்ச் செய்கை மட்டுமன்றி உப உணவுச் செய்கையும் கடுமையாக பாதிப்பு!!

560

Malaiவிவசாய மாவட்டமான வவுனியாவில் கடந்த மூன்றாண்டுகளைப் போன்று இந்த ஆண்டும் போதிய மழைவீழ்ச்சியின்மையால் நெற்பயிர்ச் செய்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயத்தை நம்பி வாழும் விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.

இது குறித்து கருத்து தெரிவித்த வவுனியா விவசாயத் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் அ.ஷகீலா பானு, கடந்த சில ஆண்டுகளாகவே வவுனியா மாவட்டத்திற்கு சரியான மழை வீழ்ச்சி கிடைக்கவில்லை. இவ் ஆண்டும் விவசாயத்துக்கு தேவையான மழை வீழ்ச்சி கிடைக்காத காரணத்தால் நெற்பயிர்ச் செய்கை மட்டுமன்றி உப உணவுச் செய்கையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் விவசாயிகள் கடுமையான பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் உப உணவுச் செய்கையின் வீழ்ச்சி காரணமாக அவற்றின் விலைகள் அதிகரிக்கக்கூடிய வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவித்தார்.