கூட்டுத்தாபனங்களில் பணியாற்றும் அரசாங்க ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்!!

611

அரசாங்க ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

கூட்டுத்தாபனங்களில் பணியாற்றும் அரச ஊழியர்களுக்கும் இரண்டாயிரத்து 500 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

2019ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரசசாங்க ஊழியர்களுக்கு இரண்டாயிரத்து 500 ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டது.

எனினும் இராணுவத்தினர் மற்றும் கூட்டுத்தாபன ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு வழங்கப்படவில்லை. இந்த வருட நிறைவுக்கு முன்னர் அவர்களுக்கான சம்பள அதிகரிப்பை வழங்கவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். தேசிய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போது அமைச்சர் இந்தத் தகவலை வெளியிட்டார்.