பாதுக்க மற்றும் ஹொரணை பிரதேசத்தில் இயங்கும் இரண்டு தொழிற்சாலைகளில் பணியாற்றும் 200 ஊழியர்கள் நேற்று திடீரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
உணவு விஷமானதில் இவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். நேற்று மதிய உணவை உட்கொண்ட பின்னர் இந்த ஊழியர்களுக்கு வாந்தி, மயக்கம் போன்ற நோய் அறிகுறிகள் ஏற்பட்டுள்ளன.
இதனையடுத்தே இவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
களுத்துறை மாவட்டம் இங்கிரிய பிரதேசத்தை சேர்ந்த ஒரு நிறுவனத்திற்கு சொந்தமான தொழிற்சாலையே பாதுக்க மற்றும் ஹொரணை பிரதேசத்தில் இயங்கி வருகின்றன.