மூடநம்பிக்கை ஒழிக்க இறந்தவரின் பாடையை தூக்கிச்சென்ற பெண்கள்!!

1874

Paadai

திருவாரூர் நகர திராவிடர் கழகத் துணைத்தலைவர் அறிவுக்கண்ணு தனது 73 வது வயதில் மறைவுற்றார். இறுதி ஊர்வலத்தில் திராவிடர் கழக மகளிரணியினர் பாடையை தூக்கிச்சென்றனர்.

உயிரிழப்புகளின் போது பெண்களை பலவீனமானவர்களாகவே நம் சமூகம் கருதுகிறது. மரண வீட்டில் ஒப்பாரி வைக்கவும், உடலை குளிப்பாட்டவும் அனுமதித்துவிட்டு வீட்டின் வாசலோடு நிறுத்தி விடுகிறது.

உயிரற்ற உடலே பிணம் அதில் வேறொன்றுமில்லை.பேய், பிசாசு பிடித்தல் என்பதெல்லாம் மூடநம்பிக் கைகளே அன்றி வேறல்ல என்பதை உணர்த்தும் விதமாக திராவிடர் கழக மகளிர் அணியினர் சுடுகாடு வரை பிணத்தைத் தூக்கி வந்து எரியூட்டவோ அடக்கம் செய்யவோ கடமையாற்றுகின்றனர்.

தமிழகத்தின் பல்வேறு ஊர்களிலும் இந்த மூடநம்பிக்கை ஒழிப்புப் பணிகளை மேற்கொள்கின்றனர். அதில் ஓர் நிகழ்வே இது.