புத்தாண்டை முன்னிட்டு முன்னாள் வவுனியா உப நகரபிதாவும், கோயில்குளம் இளைஞர் கழக தலைவரும், புளொட் அமைப்பின் முக்கியஸ்தருமாகிய திரு.க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்களின் ஒழுங்கமைப்பில் வவுனியா கோயில்குளம் பகுதியில் வசிக்கும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு மிகவும் வறுமைக் கோட்டிற்குட்பட்ட பாடசாலைப் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
லண்டனில் வசிக்கும் புளொட் அமைப்பைச் சேர்ந்த திரு. தர்மலிங்கம் நாகராஜா அவர்களினால் இதற்கான நிதி அன்பளிப்பாக வழங்கப்பட்டதுடன், வவுனியா உப நகரபிதாவும், கோயில்குளம் இளைஞர் கழக தலைவரும், புளொட் முக்கியஸ்தருமாகிய திரு.க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்களினால் மேற்படி பிள்ளைகளுக்கு நேற்று பிற்பகல் 3 மணியளவில் கோயில்குளம் இளைஞர் கழக இளைஞர்களின் உதவியுடன் கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.