கொழும்பில் பொலிஸ் கான்ஸ்டபிளை கடித்துக் குதறிய இளைஞன்!!

659

Handபொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரைக் கடித்துவிட்டு அங்கிருந்து ஓட முற்பட்ட இளைஞர் ஒருவரை எதிர்வரும் 9ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு, காலி முகத்திடலில் திருட்டு வேலைகளில் ஈடுபட்ட இளைஞனை பொலிஸ் கான்ஸ்டபிள் பிடித்துள்ளார். இதனையடுத்து குறித்த இளைஞன் தப்பிச் செல்ல முற்பட்டதோடு கான்ஸ்டபிளின் கை மற்றும் வயிற்றுப் பகுதியைக் கடுமையாகக் கடித்துள்ளார்.

எனினும் இளைஞனைக் கைது செய்ததுடன் இன்று நீதிமன்றத்திலும் ஆஜர்படுத்தப்பட்டார். சந்தேகநபருக்கு ஏதேனும் தொற்று நோய் உள்ளதா என்பது தொடர்பில் அறிவதற்காக நீதிமன்ற வைத்திய அதிகாரி ஒருவரிடம் முன்னிலைப்படுத்தி இரத்த மாதிரி பரிசோதனையொன்றுக்கு உட்படுத்த அனுமதிக்குமாறு பொலிஸார் விடுத்த வேண்டுகோளுக்கு நீதவான் அனுமதி வழங்கினார்.