பிரிட்டனில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இலங்கையர் உள்ளிட்ட 4 பேர் கைது!!

674

britishபிரிட்டனில் சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்த ஒரு இலங்கையர் உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட ஏனையவர்கள் பாகிஸ்தானியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரிட்டனின் சென்டிர்ஹார்ஸ்டில் உள்ள வர்த்தக நிலையங்களில் கடமையாற்றியவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் தடுப்பு முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

வீசா காலம் காலாவதியானதன் பின்னர் தங்கியிருந்ததாக 25 வயதான இலங்கையருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்த குறித்த நால்வரையும் நாடு கடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சட்டவிரோதமான முறையில் குறித்த நபர்களை கடமையில் அமர்த்தியமைக்காக வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு பத்தாயிரம் ஸ்ரெலிங் பவுண்ட் அபராதம் விதிக்கப்படக் கூடுமென தெரிவிக்கப்படுகிறது.