பிரியா ஆனந்தை உசுப்பிவிட்ட இயக்குனர்!!

483

Priya Anand

கரவன் ஹோட்டல் அறை சரியில்லன்னு சண்டை போடுங்க என்று பிரியா ஆனந்தை உசுப்பிவிட்டார் புதுமுக இயக்குனர்.

விக்ரம் பிரபு நடிக்கும் படம் அரிமா நம்பி. பிரியா ஆனந்த் தான் நாயகி. கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். சிவமணி இசை அமைக்கிறார். ஏ.ஆர்.முருகதாசிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ஆனந்த் சங்கர் இயக்குகிறார். அவர் நாயகி பிரியா ஆனந்தை உசுப்பிவிடும்படி நிருபர்கள் சந்திப்பின்போது பேசினார்.
அவர் கூறியதாவது..

உதவி இயக்குனராக பணியாற்றியபோது நிறைய நாயகிகள் படப்பிடிப்பு தலத்துக்கு வந்தால் என்னென்ன கேட்பார்கள் என்பதை கண்கூடாக பார்த்திருக்கிறேன்.

எதிர்நீச்சல் ஹிட் படத்தில் நடித்த பிரியா ஆனந்த் கோலிவுட்டில் டிமாண்ட் உள்ள கதாநாயகி பட்டியலுக்கு வந்துவிட்டார். ஆனால் படப்படிப்பு தலத்துக்கு வந்தால் அவர் எதுவும் டிமாண்ட் செய்வதில்லை. சொல்லப்போனால் கதாநாயகி என்ற பந்தாவே அவரிடம் இருக்காது.

ஏங்க இப்படி அமைதியா இருக்கீங்க. நீங்க இந்த படத்தோட கதாநாயகி கொஞ்சமாவது அதை வெளிபடுத்துங்க. இல்லையென்றால் நீங்கதான் நாயகின்னு நாங்க எப்படி நம்பறது கரவன் சரி இல்லை, ஹோட்டல்ல ரூம் வசதியா இல்லன்னு சண்டை போடுங்க. இப்படி எதுவுமே கேக்காம இருந்தா எப்படி என்று அவரிடம் ஜாலியாக கேட்பேன்.

ஆனாலும் அதற்கெல்லாம் அவர் ஒரேயொரு சிரிப்பை மட்டும் பதிலாக தந்துவிட்டு போய்விடுவார். இவ்வாறு ஆனந்த் ஷங்கர் கூறினார்.