புத்தாண்டில் அப்ரிடிக்கு கிடைத்த அதிர்ச்சி!!

598

Afridiஇந்த புது­வ­ரு­டத்தில் எனக்கு கிடைத்த முத­லா­வது செய்­தி­யானது எனது 17 வருட சாத­னையை முறி­ய­டித்­தது பற்­றி­யாகும் என பாகிஸ்தானின் அதிரடி வீரர் சயிட் அப்ரிடி தெரிவித்துள்ளார்.

குறைந்த பந்துகளுக்கு முகம் கொடுத்து சதம் அடித்த சாதனைக்கு இதுவரை சொந்தக்காரராக இருந்தவர் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சயிட் அப்ரிடி. இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்..

நான் ஓய்வுபெறும் வரை எனது சாத­னையை யாரும் முறியடிக்க மாட்டார்கள் என நினைத்திருந்தேன். ஆனாலும் நியூஸிலாந்து விரர் கொரி அண்டர்சன் முறியடித்துள்ளார்.

கொரி அண்டர்சனின் பெயரை இதற்கு முதல் கேள்விப்பட்டதே கிடையாது. இந்நிலையில் என் உறவினர் ஒருவர் நேற்று காலை எனக்கு இந்த செய்தியை சொன்னார்.

இருபதுக்கு 20 போட்டிகள் இருக்கின்ற காரணத்தால் குறைந்த பந்துகளுக்கு முகம் கொடுத்து சதத்தை கடந்தவர் என்ற சாதனை விரைவில் முறியடிக்கப்படலாம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.