இ றந்த தன்னுடைய தந்தையின் முன் மகன் திருமணம் செய்துகொண்ட வீடியோ காட்சியானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
கடந்த ஆகஸ்டு மாதம் 10ம் திகதியன்று ஆசிரியராக பணிபுரிந்து வரும் அலெக்ஸ்சாண்டர் என்பவர், நிச்சயிக்கப்பட்ட திருமண திகதிக்கு முன்பாகவே தன்னுடைய தந்தை இறந்ததால், அவருடைய ச டலத்திற்கு முன்பே காதலி ஜெகதீஸ்வரியை மணமுடித்தார்.
இந்த வீடியோ காட்சியானது இணையத்தளம் முழுவதும் வைரலாக பரவி தம்பதியினருக்கு பல்வேறு பக்கங்களில் இருந்தும் வாழ்த்து மழை குவிந்தது.
இந்த நிலையில் இ றந்த தன்னுடைய தந்தையின் சடலத்திற்கு முன், உறவினர்களை அனைவரும் சூழ்ந்திருக்க பேராசிரியர் ராமசாமி தலைமையில் இளைஞர் ஒருவர் பெண்ணுக்கு தாலி கட்டியுள்ளார்.
நெகிழ்ச்சியான இந்த சம்பவத்தை நேரில் பார்த்துகொண்டிருந்த பலரும் அங்கு அழ ஆரம்பித்துவிட்டனர். இந்த வீடியோ காட்சியும் தற்போது இணையதளங்களில் வெளியாகி வாழ்த்துக்களை பெற்று வருகிறது.