15 வயது சிறுமியை பலாத்காரம் செய்தவரை அடித்தே கொன்ற மக்கள்!!

682

Abuseதென்னாபிரிக்காவில் 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய நபரை மக்கள் கல்லால் அடித்து கொன்றுள்ளனர்.

தென்னாபிரிக்காவில் உள்ள கேப்டவுன் நகரில் 32 வயது நபர் ஒருவர் 15 வயது சிறுமையை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திவிட்டு பின்னர் மக்களிடமிருந்து கையடக்கத் தொலைபேசிகள் போன்றவற்றை கொள்ளையிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து ஒரு பாரிற்கு சென்று மது அருந்திக்கொண்டிருந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் அவரைச் சுற்றி வளைத்து பிடித்து தடியாலும், கல்லாலும் சரமாரியாக அடித்தனர்.

இதனால் படுகாயம் அடைந்த அவர் அதே இடத்தில் பலியானார். ஆனால் இச்சம்பவம் குறித்து பொலிசார் நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளவில்லை. இதுவரை யாரையும் கைது செய்யவில்லை.

பாதிக்கப்பட்ட சிறுமி கொலை மிரட்டல் உள்ளிட்ட காரணங்களால் அப்பகுதியை விட்டே வெளியேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.