மீண்டும் பிரதமராகும் எண்ணமில்லை : மன்மோகன் சிங்!!

563

Manmohan1ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்தால் மீண்டும் பிரதமராகும் எண்ணமில்லை என்று மன்மோகன் சிங் கூறினார்.

டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமர் வேட்பாளரை உரிய நேரத்தில் காங்கிரஸ் கட்சி அறிவிக்கும் என்றார்.

நாட்டை இளைய தலைமுறையினர் வழிநடத்துவார்கள் என்றும் மன்மோகன் சிங் தெரிவித்தார். ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு வெளிப்படையாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினேன் என தெரிவித்த மன்மோகன் சிங், பிரதமராக நேர்மையான முறையில் கடமையாற்றி வருகிறேன் என்றார்.

பிரதமர் பதவியை ராஜினாமா செய்யும் எண்ணம் எழுந்ததில்லை என்று தெரிவித்த அவர், பிரதமராகும் தகுதி காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு உள்ளது என்றார். மேலும் நான்கு மாநில தேர்தல் தோல்விக்கு விலைவாசி உயர்வு காரணமாக இருக்கலாம் என்றார் மன்மோகன் சிங்.