வவுனியா கோவில்குளம் சிவன் கோவிலில் மழை வேண்டி யாகம்!!

634

Sivan Kovilவவுனியா கோவில்குளம் சிவன் கோவிலில் கடந்த 1ம் திகதி மழை வேண்டி சிறப்பு யாகம் நடாத்தப்பட்டது.

வவுனியாவில் போதிய மழைவீழ்ச்சியின்மையால் வறட்சி நிலவுகின்றது. வவுனியாவின் பெரிய குளங்கள் அனைத்தும் விவசாயத்துக்கு போதுமான நீர் இன்றி காணப்படுகின்றது. இதனால் நெற்பயிருக்கு பாச்ச நீரின்றி விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

இன் நிலைமையில் வவுனியா கோவில்குளம் சிவன் ஆலயத்தில் மழை வேண்டி சிவாச்சார்யர்களால் சிறப்பு யாகம் நடைபெற்றது. அத்துட்டன் சிறப்பு பிராத்தனைகள், பூசைகள் என்பன நடைபெற்றதுடன் அன்னதான நிகழ்வும் நடைபெற்றது.