வவுனியாவில் இரு முச்சக்கரவண்டிகள் மோதி விபத்து!!

544

முச்சக்கரவண்டிகள் மோதி விபத்து

வவுனியா புகையிர நிலைய வீதியில் இன்று(27.09) மாலை இரு முச்சக்கரவண்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.

வவுனியா புகையிரத நிலைய வீதியில் ஒரமாக நிறுத்தியிருந்த முச்சக்கர வண்டி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்து புகையிரத நிலைய வீதியூடாக,

வவுனியா நகர் நோக்கி பயணத்தை ஆரம்பித்த வேளை அதே பாதையில் பயணித்த முச்சக்கர வண்டி வீதியில் ஏற முற்பட்ட முச்சக்கரவண்டியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. எனினும் முச்சக்கரவண்டியில் பயணித்த எவருக்கும் எவ்வித சே தங்களும் ஏற்படவில்லை.

இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகள் வவுனியா போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.