வவுனியா குட்செட் வீதியில் விபத்து : இருவர் படுகாயம்!!

635

இருவர் படுகா யம்

வவுனியா, குட்செட் வீதியில் மோட்டார் சைக்கிள் – துவிச்சக்கர வண்டி மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் ப டுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று (27.09) மாலை இடம்பெற்ற இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, குட்செட் வீதியில் ஆலடிச் சந்தி நோக்கிப் பயணித்த முதியவர் மீது அதே திசையில் வேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது.

குறித்த விபத்தில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த முதியவர் மற்றும் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஆகிய இருவரும் படுகாயமடைந்திருந்தனர்.

இந் நிலையில் அங்கிருந்த பொதுமக்கள் 1990 என்ற அவசர நோயாளர் காவு வண்டியிற்கு தொடர்பு கொண்டு அதனூடாக ப டுகாயமடைந்த இருவரையும் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.