வடக்கிற்கு கடும் காற்று : கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை!!

1212

STORMநாட்டின் வடக்கு பிரதேசத்தை நோக்கி கடும் காற்றுடன் கூடிய காலநிலை நிலவுவதன் காரணமாக இப் பிரதேசங்களிற்கு மணித்தியாலத்திற்கு 100 கிலோ மீற்றர் வரை காற்றின் வேகம் அதிகரிக்கும் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு பிரதேச கடற்பரப்பு கடும் கொந்தளிப்பாக காணப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காலநிலையின் காரணமாக யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு கடற் பிரதேசங்களிலிருந்து 100 மீற்றருக்கு உட்பட்ட குடியிருப்பாளர்களை அவ்விடங்களிலிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

வடக்கு பிரதேசங்களில் மழையுடன் கூடிய காலநிலையும் நிலவப் பெறும் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.