
சீன அரசாங்கம் இலங்கைக்கு வெ டி பொ ருட்களை க ண்டுபிடிக்கும் மற்றும் போ தைப் பொ ருட்களை கண்டறியும் நவீன க ருவிகளை வழங்கியுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கோரிக்கையின் பேரில் இந்த க ருவிகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த கருவிகளின் மூலம் ப டையினர் பொதுமக்களின் பா துகாப்பு தொடர்பில் இலகுவான காரியங்களை மேற்கொள்ளமுடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப்பொருட்களை சீனாவின் தூதுவர் நேற்று ஜனாதிபதியின் செயலாளரிடம் கையளித்துள்ளார்.
வெ டிப்பொ ருட்களை க ண்டறியும் 85.5 மில்லியன் ரூபா பெறுமதியான ரொபொட்ஸ், போ தைப் பொருட்களை கண்டறியும் 90.5 மில்லியன் ரூபா பெறுமதியான கருவிகள், 4.2 மில்லியன் பெறுமதியான 50 எக்ஸ்ரே கருவிகள் 12 மில்லியன் ரூபா பெறுமதியான மேலும் பல கருவிகளும் இதில் அடங்கியுள்ளன.




