வவுனியாவில் நான்கு நாட்களாக மாத்தறை செல்ல முடியாது தரித்து நிற்கும் ரஜட்ட ரஜனி!!

514

ரஜட்ட ரஜனி

நாடாளாவிய ரீதியில் புகையிரத ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக வவுனியா புகையிரத நிலைய ஊழியர்களும் கடந்த 26.09.2019 தொடக்கம் இன்று வரை பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் புகையிரத சேவைகள் முற்றாக முடங்கியுள்ளதுடன், இராணுவத்தினர், பொலிசார் புகையிரத நிலையத்தில் பா துகாப்பு க டமையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

தினசரி அதிகாலை 3.35 இற்கு வவுனியாவில் இருந்து மாத்தறை நோக்கிப் பயணிக்க வேண்டிய ரஜட்ட ரஜனி புகையிரதம் கடந்த நான்கு நாட்களாக (26.09.2019 – 30.09.2019) வவுனியாவிலேயே தரித்து நிற்கின்றது.

சம்பள மு ரண்பாடுகள், கடந்த அமைச்சரவை கூட்ட முடிவுகள் நடைமுறைப்படுத்தாமை உட்பட பல்வேறு பி ரச்சனைகளை முன்னிறுத்தி குறித்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து வவுனியா புகையிரத நிலைய அதிபர்கள், ஒழுங்கமைப்பாளர்கள், இயக்குனர்கள் உள்ளிட்ட புகையிரத ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.