ஆசிய மற்றும் 20- 20 உலக கிண்ணப் போட்டிகளை நடத்த இலங்கை விருப்பம் தெரிவித்துள்ளது. 20- 20 ஓவர் உலக கிண்ண போட்டிகள் வருகிற மார்ச் 16ம் திகதி முதல் ஏப்ரல் 6ம் திகதி வரை வங்கதேசத்தில் நடக்கவுள்ளது.
தற்போது வங்கதேசத்தில் கலவரம் வெடித்துள்ளதால் உலக கிண்ண போட்டிகள் நடைபெறுமா என்பது சந்தேகம் தான். எனவே இப்போட்டிகளை இடமாற்ற ஐசிசி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் போட்டிகளை நடத்த இலங்கை விருப்பம் தெரிவித்துள்ளது. இதேபோன்று ஆசிய கிண்ணப் போட்டிகளையும் நடத்த விருப்பம் உள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை செயலாளர் நிஷந்தா ரனதுங்க தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெறும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் இதுபற்றி முடிவு மேற்கொள்ளப்படும் என தெரிகிறது.





