பர்தா உடை அணிந்து வங்கிக் கொள்ளையில் ஈடுபட முயன்ற இராணுவ கெப்டனுக்கு கடூழிய சிறை!!

1709

Farthaமுஸ்லிம் பெண் போன்று முகத்தை மறைத்து பர்தா உடை அணிந்து அரச வங்கியில் கொள்ளையிட முயற்சித்த வேளை கைது செய்யப்பட்ட இராணுவ கெப்டன் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு இரண்டு வருடங்கள் கடூழிய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் இராணுவத்திற்கு இழுக்கு ஏற்படுத்திய அவரை பணிநீக்கம் செய்ய இராணுவ நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

கண்டி – மஹியாவ நகர் அரச வங்கியொன்றில் பர்தா உடை அணிந்து கொள்ளையிட முயற்சித்த வேளை கடந்த வருடம் பெப்ரவரி மாதம் அவர் கைது செய்யப்பட்டார். குறித்த நபருக்கு எதிராக கண்டி நீதிமன்றில் சிவில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.