இலங்கையில் சிறைக் கைதிகளின் சம்பளம் உயர்வு!!

785

Jailஇலங்கையில் சிறைக் கைதிகளின் சம்பளங்களை உயர்த்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி நாள் ஒன்றுக்கு ஒரு ரூபா சம்பளம் பெற்றுக் கொள்ளும் கைதியின் சம்பளம் 60 ரூபாவாகவும், நாள் ஒன்றுக்கு ஒரு ரூபா ஐம்பது சதம் சம்பளம் பெற்றுக் கொள்ளும் கைதியின் சம்பளம் 75 ரூபாவாகவும், நாள் ஒன்றுக்கு இரண்டு ரூபா சம்பளம் பெற்றுக் கொள்ளும் கைதியின் சம்பளம் 85 ரூபாவாகவும், நாள் ஒன்றுக்கு இரண்டு ரூபா ஐம்பது சதம் சம்பளம் பெற்றுக் கொள்ளும் கைதியின் சம்பளம் 100 ரூபாவாகவும் உயர்த்தப்படவுள்ளது.

சிறைகளில் தண்டனை அனுபவித்து வரும் கைதிகள் தண்டனைக் காலத்தை பூர்த்தி செய்து நாடு திரும்பும் போது அவர்களுக்கு வாழ்வாதாரத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில் இவ்வாறு சிறைச்சாலைகளில் பணிகள் வழங்கப்படுகின்றன.

சிறைச்சாலைகளில் தண்டனை அனுபவித்து வரும் பதினோராயிரம் கைதிகள் மேசன், சவர்க்கார தயாரிப்பு, தச்சு, அச்சு உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.