புதிய பத்து ரூபா நாணயக்குற்றிகள் அறிமுகம்!!

1142

Coinபத்து ரூபா நாணயக்குற்றிகள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இலங்கையின் சகல மாவட்டங்களையும் பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் இந்த நாணயக்குற்றிகள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

ஒவ்வொரு மாவட்டத்திற்கும் உரித்தான தொல்பொருள், கலாச்சார, பொருளாதார, சுற்றாடல், சமய மற்றும் சமூக விடயங்களை உள்ளடக்கிய வகையில் நாணயக்குற்றி வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஒரு பத்து ரூபா நாணயக்குற்றி கொழும்பு நகரத்தை பிரதிபலிக்கும் வகையிலான உருவப்படமொன்றை உள்ளடக்கியுள்ளது. கொழும்புத் துறைமுகம் மற்றும் நகர காட்சிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.