கலவரம் நடந்தாலும் போட்டிகளில் மாற்றமில்லை : ஆசிய கிரிக்கெட் கவுன்சில் திட்டவட்ட அறிவிப்பு!!

513

ACCபோராட்டங்கள் நடந்தாலும் திட்டமிட்டபடி ஆசிய கிண்ண போட்டிகள் வங்கதேசத்தில் நடைபெறும் என ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.

வங்கதேசத்தில் கடந்த இரண்டு மாதங்களாக அரசியல் ஸ்திரமற்ற சூழ்நிலை நிலவுகிறது.

கடந்த மாதம் டாக்காவில் 19 வயதுக்கு உட்டோருக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணியினர் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அருகே குண்டு வெடித்தது. இதனால், அந்த அணி தொடரை ரத்து செய்து விட்டு நாடு திரும்பியது.

தொடர்ந்து வன்முறை நடப்பதால் பெப்ரவரி 24ம் திகதி தொடங்க இருந்த ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டி வேறு இடத்துக்கு மாற்றப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இதுகுறித்து ஆலோசிப்பதற்காக ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் செயற்குழுக் கூட்டம் கொழும்பில் நேற்று முன்தினம் கூடியது.

கூட்டம் முடிந்த பின் ஏசிசி தலைமை செயல் அதிகாரி அஷ்ரஃபுல் கூறுகையில், ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் திட்டமிட்டபடி வங்கதேசத்தில் நடைபெறும்.

இத்தொடரில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய அணிகளுடன் ஆஃப்கானிஸ்தான் அணியும் இடம்பெறும்.

இந்தப் போட்டியை ஸ்டார் இந்தியா நிறுவனம் ஒளிபரப்பு செய்யும் என்றும், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து வங்கதேசம் விரிவாக எடுத்துரைத்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.