மனிதனின் உயிரை குடித்த முட்டை!!

1194

Eggபுதுவை அருகே வேகவைத்த முட்டையை ஒருவர் விழுங்கியபோது, தொண்டையில் சிக்கி உயிரிழந்துள்ள சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுவை முத்திரபாளையத்தைச் சேர்ந்தவர் பாண்டியன் (37). அரசு அச்சகத்தில் தினக்கூலி பணியாளராக இருந்தார். வியாழக்கிழமை இரவு குடிபோதையில் வீட்டுக்குச் சென்ற இவர் இரவு உணவை சாப்பிட்டுள்ளார்.

அப்போது வேகவைத்த முட்டையை முழுதாக விழுங்கிய போது அது தொண்டைக்கு நடுவே சிக்கிக் கொண்டுள்ளது. மூச்சுத்திணறல் ஏற்படவே அவரை கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே இறந்தார்.

இதுகுறித்து மேட்டுப்பாளையம் பொலிசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.