ஜனாதிபதி மஹிந்தவுக்கு பலஸ்தீனின் நட்சத்திரம் விருது!!

433

Mahinda

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு பலஸ்தீனின் நட்சத்திரம் (ஸ்டார் ஒப் பலஸ்தீன்) எனும் பலஸ்தீனின் அதியுயர் விருது பலஸ்தீன் அரசாங்கத்தால் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முதற் பெண்மணி ஷிரந்தி விக்கிரமசிங்க ராஜபக்ஷ ஆகியோர் இலங்கை தூதுக் குழுவுடன் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று காலை பலஸ்தீனம் சென்றடைந்துள்ளனர்.

ஜனாதிபதி ராஜபக்ஷ பலஸ்தீன பிரதம அமைச்சர் ராமி ஹம்தல்லா, இலங்கைக்கான பலஸ்தீன தூதுவர் கலாநிதி அன்வர் எச்.அல்-அக்ஹா, பலஸ்தீனததில் பதிற்கடமையாற்றும் இலங்கைப் பிரதிநிதி சிராஜ் அஹமட், பெத்தலஹேமில் உள்ள இலங்கையின் காவற் தூதர் மைக்கல் ஷோமாலி ஆகியோர் வரவேற்றனர்.



பலஸ்தீனத்தை அடைந்த ஜனாதிபதி ராஜபக்ஷ, முன்னாள் பலஸ்தீன ஜனாதிபதி, காலஞ்சென்ற யசிர் அரபாத்தின் சமாதிக்கு மலர்வளையம் சார்த்தி அஞ்சலி செலுத்தினார்.