மாணவியை அழைத்து பா லியல் து ஸ்பிரயோகம் செய்தவருக்கு நேர்ந்த கதி!!

261

மாணவியை..

வீதியில் சென்று கொண்டிருந்த பாடசாலை மாணவியை அழைத்து பா லியல் து ஸ்பிர யோகம் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கு பிணை விண்ணப்பம் மறுக்கப்பட்டு எதிர்வரும் ஒக்டோபர் 30ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு நேற்று கல்முனை நீதிமன்ற நீதவான் ஐ.என்.றிஸ்வான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கடந்த ஆகஸ்ட் மாதம் 31ம் திகதி அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், சந்தேக நபர் இரு நாட்கள் அட்டாளைச்சேனை பகுதியில் தலைமறைவாகி இருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபரை நீதிமன்றில் ஆஜர்படுத்தியதை அடுத்து வழக்கு தொடர்பில் மருத்துவ பரிசோதனைகள் மற்றும் விசாரணை அறிக்கைகள் என்பன மன்றில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

மேலும் குறித்த சந்தேக நபர் சார்பாக ஆஜரான சட்டத்தரணி சந்தேக நபரது வயது, உடல் நலன் தொடர்பாக சுட்டிக்காட்டி பிணை விண்ணப்பம் தொடுத்த போதிலும் நீதிவான் பாதிக்கப்பட்ட மாணவியின் வயதினை சுட்டிக்காட்டி பிணை விண்ணப்பத்தை மறுத்துள்ளார்.

கல்முனைகுடி கனீபா வீதி பகுதியை சேர்ந்த ஜெயினுத்தீன் அப்துல் கரீம் (58 வயது) என்பவருக்கே இவ்வாறு பிணை மறுக்கப்பட்டுள்ளது. இதன்போது பாதிக்கப்பட்ட மாணவி அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.