கண்டி மாவட்டம், கண்ணொருவ பிரதேசத்தில் கராஜ் உரிமையாளரைத் தாக்கியதாகக் கூறப்படும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரை கிராம மக்கள் மரத்தில் கட்டி வைத்துள்ளனர்.
தங்களது நண்பரின் பஸ் வண்டியின் திருத்த வேலைகள் தாமதமடைவது தொடர்பில் விசாரிப்பதற்காக கண்ணொருவையிலுள்ள கராஜ் ஒன்றுக்குச் சென்ற கராஜ் உரிமையாளரை உப பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஒருவரும் சார்ஜன்ட் ஒருவரும் தாக்கியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து குறித்த இருவரையும் கிராமவாசிகள் பிடித்து மரத்தில் கட்டிவைத்து பேராதனைப் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். தாக்குதலில் காயமடைந்த கராஜ் உரிமையாளர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.




