தாழமுக்கம் காரணமாக வவுனியாவில் தொடர்ந்தும் பலத்த மழை பெய்துவருகின்றது. இதனால் மக்கள் தமது அன்றாட வேலைகளை செய்யமுடியாது சிரமப்பட்டு வருகின்றனர்.
இன்று காலை 5.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் அதிகளவிலான மழைவீழ்ச்சி வவுனியாவில் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது .
வவுனியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 188 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. மேலும் கடும் குளிருடன் கூடிய காலநிலையும் நிலவுவதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.