பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து இலங்கை அணியின் வீரர் திரிமன்ன காயம் காரணமாக விலகியுள்ளார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சென்றுள்ள இலங்கை அணி, பாகிஸ்தானுக்கு எதிராக 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் சமநிலையில் முடிந்தது.
இந்நிலையில் இரு அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று துபாயில் ஆரம்பமாகிறது.
இதற்கான பயிற்சியின் போது இலங்கை வீரர் திரிமன்னவுக்கு வலது கணுக்காலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, தாயகம் திரும்பவுள்ளார். இவருடைய இடத்தை குசல் பெரேரா பூர்த்தி செய்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் குலசேகர, காயம் காரணமாக இத்தெடரில் இருந்து விலகினார். தற்போது திரிமன்னவும் விலகியுள்ளது, இது இலங்கை அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தலாம்.





