சுஜித் விழுந்த இடத்தில் கோவில் கட்ட ஆசைப்படும் தாயார் கலா மேரி!!

492

சுஜித் விழுந்த இடத்தில் கோவில்?

சுஜித் விழுந்த இடத்தில் கோவில் கட்ட ஆசைப்படுவதாக குழந்தையின் தாய் கலா மேரி கூறியுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை மாலை 5.40 மணியளவில் ஆழ்துளை கிணற்றில் த வறி விழுந்த 2 வயது குழந்தை சுஜித், இன்று அதிகாலை ச டலமாக மீட்கப்பட்டான்.

சுஜித்தின் உ டல் பாத்திமா புதூர் கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இந்த சம்பவமானது ஒட்டுமொத்த தமிழகத்தையும் பெரும் சோ கத்தில் ஆழ்த்தியது.

சுஜித் உ டல் புதைக்கப்பட்டிருக்கும் இடத்திற்கு ஏராளாமான பொதுமக்களும், அரசியல் தலைவர்களும் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

இந்த நிலையில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள சுஜித்தின் பெற்றோர் ஆரோக்கியதாஸ் மற்றும் கலா மேரி, குழந்தை உ யிருடன் மீ ட்கப்பட வேண்டும் என வேண்டிக்கொண்ட அனைவருக்கும், மீட்பு பணிக்கு உதவிய முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோருக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.

மேலும், சுஜித் விழுந்த இடத்தில் கோயில் கட்டவேண்டும் என்பதுவே என் ஆசை என கலா மேரி கூறியுள்ளார். ஆழ்துளை கிணறுகளில் என மகனே கடைசி இறப்பாக இருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.