தாய்க்கு நேர்ந்துள்ள ப ரிதாபம்

பெற்ற மகள் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில் யாழ்ப்பாணத்தில் எந்தவித உதவியும் இன்றி தனிமையில் வசித்து வந்த தாய் ச டலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் கடந்த 29ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாகவும்,

யாழ். குப்பிளான் வடக்கு சுன்னாகம் பகுதியில் வசித்து வந்த சின்னத்தம்பி தனபதி என்பவரே இவ்வாறு ச டலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. இ றந்த தாயின் மகள் பிரித்தானியாவில் வசித்து வரும் நிலையில் அவர் தாயுடன் கதைப்பதில்லை எனவும், எந்த வித பண உதவியும் செய்வதில்லை எனவும் தெரியவருகிறது.

இந்த நிலையில் அயலவர்களிடம் உணவு வாங்கி உட்கொண்டே தாய் வசித்து வந்துள்ளார். இவ்வாறான சந்தர்ப்பத்தில் கடந்த 29ஆம் திகதி அயல்வீட்டு உறவினர் ஒருவர் உணவு வழங்குவதற்காக சென்றுள்ளார்.

இதன்போதே அந்த தாய் இ றந்த நிலையில் ச டலமாக காணப்பட்டுள்ளதுடன், இது தொடர்பில் உடனடியாக சுன்னாகம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.




