வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய அபிவிருத்திக் குழுக் கூட்டம் : புதிய செயலாளர் தெரிவு!!

468

அபிவிருத்திக் குழுக் கூட்டம்

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் அபிவிருத்தி குழுக் கூட்டமும் புதிய நிர்வாகத் தெரிவும் இன்று (02.11) இடம்பெற்றது.

இன்று காலை 9 மணியளவில் பாடசாலையின் கேட்போர் கூடமான ஐயாத்துரை மண்டபத்தில் பிரதி அதிபரின் தலைமையில் ஆரம்பமான இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா தெற்கு வலய கல்வி பணிப்பாளர் இராதாகிருஷ்ணன் கலந்துகொண்டார்.

தொடர்ந்து நிர்வாக தெரிவு இடம்பெற்றது இதில் பாடசாலையின் அபிவிருத்தி குழுவின் செயலாளராக பிரபல சட்டத்தரணி தயாபரன் அவர்கள் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டிருந்தார் இதனை தொடர்ந்து நிர்வாக உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்

இதேவேளை அபிவிருத்தி குழுவில் இரண்டு உறுப்பினர்கள் பழைய மாணவர் சங்கத்தினூடாக இருக்க வேண்டும் என சுற்றறிக்கை உள்ளது ஆனாலும் பழைய மாணவர் சங்கத்தில் உள்ள குழப்ப நிலை காரணமாக தற்சமயம் இரண்டு உறுப்பினர்களை தெரிவு செய்யப்படாமல் பழைய மாணவர் சங்கத்தை சீர் செய்த பின் அதிலிருந்து இரண்டு உறுப்பினர்களை தெரிவு செய்வதே சிறப்பாக இருக்கும் என வலய கல்வி பணிப்பாளர் தெரிவித்திருந்தார்.

செயலாளரின் சிறப்புரை நன்றி உரையுடன் கூட்டம் நிறைவுக்கு வந்தது.