பல்கலைக்கழக மாணவி

ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பிரிவில் இரண்டாம் ஆண்டு கல்வி கற்கும் மாணவி ஒருவர் திடீர் ம ரணமடைந்துள்ளார். காய்ச்சல் காரணமாக பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் குறித்த மாணவி உ யிரிழந்துள்ளார்.

கண்டி, பிலிமதலாவை பிரதேசத்தை சேர்ந்த ஒஷானி எரங்கிக்கா பிட்டவல என்ற மாணவியே இவ்வாறு உ யிரிழந்துள்ளார். டெங்கு காய்ச்சல் பரவுவதன் காரணமாக ரஜரட்ட பல்கலைக்கழகம் தற்போது தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

இந்த மாணவி பரீட்சைக்காக சென்ற நிலையில், காய்ச்சல் ஏற்பட்டு பிலிமதலாவையில் அமைந்துள்ள வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உ யிரிழந்துள்ளார் என குறிப்பிடப்படுகின்றது.




