இந்திய அணியை விமர்சித்த முன்னாள் அணித்தலைவர் சுனில் கவாஸ்கருக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார் அணித்தலைவர் டோனி.
தென் ஆபிரிக்காவில் சமீபத்தில் டெஸ்ட் தொடரை இந்திய அணி பறிகொடுத்து. இந்நிலையில் இந்திய அணியின் ஆட்டத்திறனை விமர்சித்து கவாஸ்கர் கருத்து தெரிவித்திருந்தார்.
அதாவது இந்திய அணியினரிடம் வெற்றி பெற வேண்டும் என்ற வெறி இல்லை என்றார். இதற்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார் டோனி.
கொல்கத்தாவில் ஒரு நிகழ்ச்சியில் டோனி பங்கேற்ற போது, கவாஸ்கரின் விமர்சனம் குறித்து நிருபர்கள் கேள்வி கேட்டனர்.
அதற்கு பேசாமல் கையில் ஒரு ஏ.கே. 47 துப்பாக்கியும் அதில் கிரேனெட் லாஞ்சரையும் பொருத்தி எடுத்துச் செல்ல வேண்டியதுதான் என்று சிரித்தபடி கூறியுள்ளார்.
இதற்கிடையே விரைவில் நியூசிலாந்து செல்லவுள்ள இந்திய அணி, ஐந்து ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.





