மட்டக்களப்பில் இரத்தம் மாற்றி உ யிரிழந்த சிறுவன் தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு!!

487

மட்டக்களப்பில்..

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இ ரத்தம் மாற்றி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் உ யிரிழந்த வந்தாறுமூலையினை சேர்ந்த 09வயதான சிறுவன் தொடர்பான வழக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் 08ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு வந்தாறுமூலையை சேர்ந்த விதுலக்சன் கடந்த 19.03.2019 அன்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்த நிலையில் உ யிரிழந்திருந்தார்.

இ ரத்தம் மாதிரியை மாற்றி வழங்கியதன் காரணமாகவே குறித்த சிறுவன் உ யிரிழந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் இது தொடர்பிலான வழக்கு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் நடைபெற்றுவந்தது.

இதனை தொடர்ந்து நடைபெற்றுவந்த நிலையில் கடந்த மாதம் குற்றப் பு லனாய்வு பிரிவிற்கு இது தொடர்பான உண்மை தன்மை அறிய வழக்கு பாரப்படுத்தபட்டிருந்தது.

அதனை தொடர்ந்து நேற்று இந்த வழக்கு மட்டக்களப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஏ.சி.றிஸ்வான் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது குறித்த வழக்கினை தை மாதம் 08ஆம் திகதி வரையில் ஒத்திவைப்பதாக அறிவித்தார்.