பாலியல் தொழிலுக்காக இலங்கை பெண்கள் மாலைதீவு அனுப்படுகின்றனர் : பொலிஸார்!!

1136

Moldivesஇலங்கையை சேர்ந்த யுவதிகளை பாலியல் தொழிலுக்காக மாலைதீவுக்கு அனுப்பி வைக்கும் திட்டம் ஒன்று பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பன்னிப்பிட்டி ஆன்டி மற்றும் மடபாத்த சத்துராணி ஆகிய பெண்கள் இந்த நடவடிக்கையுடன் சம்பந்தப்பட்டிருப்பதாகவும், இதன் முக்கியமான நபராக சுகூர் என்ற வெளிநாட்டு நபர் செயற்பட்டு வருவதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்த விடயம் குறித்து கிடைத்த தகவலை அடுத்து பொலிஸார் மேற்படி பெண்களின் ஆடம்பர வீடுகளை சோதனையிட்டனர். அப்போது அங்கிருந்த பெண்கள் தப்பிச் சென்று விட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

சம்பவம் குறித்து விசாரணை நடத்த இலங்கை பொலிஸார் மாலைதீவு பொலிஸாரின் உதவியை நாடியுள்ளதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.