கையடக்கத் தொலைபேசிகளை சார்ஜ் செய்யும் தலையணை!!

564

Pillowகையடக்கத் தொலைபேசிகள், மடிக்கணனிகள் போன்ற மின்னணு சாதனங்களை சார்ஜ் செய்யும் தலையணையை கனடாவைச் சேர்ந்த இரு நிபுணர்கள், வடிவமைத்துள்ளனர்.

இந்த சாதனம் பவர் பில்லோ என பெயரிடப்பட்டுள்ளது. இதை சோபா மற்றும் படுக்கையில் வைத்துக் கொள்ளலாம். இந்த தலையணையில் யு.எஸ்.பி, லித்தியம்பாலிமர் பேட்டரி ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன.

இதன் காரணமாக முக்கியமான வேலை நேரங்களில், கையடக்கத் தொலைபேசிகள், மடிக்கணனிகளை, நம் வேலைகள் பாதிக்காமல், சார்ஜ் செய்ய முடியும் என, இதை வடிவமைத்தவர்களில் ஒருவரான ஹாலிபேக்ஸ் கூறியுள்ளார்.