நாட்டை விட்டு வெளியேற தேவ்யானிக்கு அமெரிக்கா உத்தரவு!!

1465

Devyaniஇந்திய துணைத் தூதரக அதிகாரி தேவ்யானியை நாட்டை விட்டு வெளியேறுமாறு அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவிற்கான அமெரிக்த துணை தூதரக அதிகாரியாக இருப்பவர் தேவ்யானி கோப்ரகேட். இவர் வீட்டு பணிப்பெண்ணிற்கு ஒப்பந்த அடிப்படையில் சம்பளம் தராமல் இரந்ததாகவும், அவரை பணியமர்த்துவதற்காக தேவ்யானி விசா முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டப்பட்டது.

இதனையடுத்து டிசம்பர் 12ம் திகதி தேவ்யானியை பொலிசார் கைது செய்தனர், அமெரிக்க சட்டப்படி கைது செய்யப்பட்ட ஒருவர் மீது 30 நாட்களுக்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

இதன்படி ஜனவரி 13ம் திகதி தேவ்யானி மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து நீதிமன்ற நடவடிக்கையை தொடக்க அமெரிக்கா முடிவு செய்திருந்தது.

இந்நிலையில் ஜனவரி 8ம் திகதி தேவ்யானியை இந்தியாவிற்கான ஐ.நா குழுவின் நிரந்தர உறுப்பினராக நியமித்து அவரது பாதுகாப்பை அதிகரித்தது.

தேவ்யானியின் பாதுகாப்பு அதிகரிப்பட்டதை அடுத்து அவரை வழக்கில் இருந்து விடுவிக்கவும் இந்தியா சார்பில் கோரிக்கை விடப்பட்டது.

ஆனால் தேவ்யானி கைது செய்யப்பட்ட போது அவர் ஐ.நா குழு உறுப்பினர் பதவியில் இல்லை எனவும் குறிப்பிட்ட அளவே சலுகைகளை பெற்றிருந்ததாகவும் கூறி அவரை விடுவிக்க அமெரிக்கா மறுத்தது.

இந்தியா எவ்வளவோ முயற்சி செய்தும் தேவ்யானியை வழக்கில் இருந்து வெளியே கொண்டு வர முடியவில்லை. நடவடிக்கைகளை தொடங்கி உள்ள அமெரிக்கா, தேவ்யானியின் பாதுகாப்பை விலக்கிக் கொள்ளுமாறு இந்தியாவிடம் கூறியது.

அதற்கு இந்தியா மறுத்ததை தொடர்ந்து, தேவ்யானி அமெரிக்காவில் இருந்து வெளியேற வேண்டும் என அமெரிக்க நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஆனால் தன் மீதான உண்மை தன்மையை நிரூபிக்காமல் அமெரிக்காவை விட்டு வெளியேற முடியாது என தேவ்யானி தெரிவித்துள்ளார்.