தன் உயிரை தியாகம் செய்து நூற்றுக்கணக்கான மாணவர்களின் உயிரை காப்பாற்றிய மாணவன்!!

623

Pak

பாகிஸ்தானில் நடத்தப்படவிருந்த தற்கொலைத் தாக்குதல் ஒன்றை தடுத்து நிறுத்தும் முயற்சியில் மாணவன் ஒருவர் தன் இன் உயிரைத் தியாகம் செய்துள்ளார்.

பாகிஸ்தானில் கைபர்– பக்துன்கவா மாகாணம் தீவிரவாதிகள் ஆதிக்கத்தில் உள்ளது. இங்கு தற்கொலை தாக்குதல்கள் மற்றும் குண்டு வெடிப்பு சம்பவங்களில் தீவிரவாதிகள் ஈடுபடுகின்றனர்.

இந்த நிலையில், ஒரு பாடசாலையில் தற்கொலை தாக்குதல் நடத்த முயன்ற ஒரு தீவிரவாதியை மாணவன் ஒருவர் தடுத்து நிறுத்தியுள்ளார். அதன் மூலம் அந்த பாடசாலையில் படிக்கும் நூற்றுக்கணக்கான மாணவர்களின் உயிரை குறித்த மாணவர் காப்பாறியதோடு தன் உயிரை துறந்துள்ளார்.

அவனது பெயர் அய்த் ஜாஷ் ஹசன் (14). இவன் கைபர்–பக்துன்கவா மாகாணத்தின் ஹன்சு மாவட்டத்தில் இப்ராகிம் ஷாயில் என்ற இடத்தை சேர்ந்தவர். அவர் அங்குள்ள அரச பாடசாலையில் 9ம் வகுப்பில் படித்து வந்தார்.

நேற்று குறித்த மாணவன் அந்தப் பாடசாலையின் வாசலில் நின்று கொண்டிருந்தபோது சந்தேகப்படும் வகையில் ஒரு மர்ம நபர் அங்கு வந்தார்.

அவர் தற்கொலை தாக்குதல் நடத்த வந்த தீவிரவாதி என்பதை அறிந்த ஹசன், அந்த மர்ம நபரை பாடசாலைக்குள் நுழைந்து விடாதபடி ஓடோடிச் சென்று வாசலில் தடுத்து நிறுத்தினார்.

அதற்குள் தற்கொலை படை தீவிரவாதி தான் இடுப்பில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்க செய்தார். அதில், தீவிரவாதியுடன் சேர்ந்து மாணவன் ஹசனும் உடல் சிதறி பலியானார். அந்த மாணவனின் தைரியத்தையும், தியாகத்தையும் கிராம மக்கள் பாராட்டினார்கள். தற்போது இவர் பாகிஸ்தானின் நாயகன் என புகழப்படுகிறார்.