2013ம் ஆண்டுக்கான சிறந்த துடுப்பாட்ட வீரருக்கான விருதுக்கு அணித்தலைவர் டோனி, வீராட் கோஹ்லி மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.
ESPN CricInfo சார்பில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் சிறந்து விளங்கும் துடுப்பாட்ட வீரர்கள் மற்றும் பந்துவீச்சாளர்களுக்கு ஆண்டுதோறும் விருது வழங்கப்பட்டு வருகிறது.
டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான சிறந்த துடுப்பாட்ட வீரர் விருதுக்கு, இந்திய அணியின் அணித்தலைவர் டோனி, ஷிகர் தவான் மற்றும் வீராட் கோஹ்லி ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
சிறந்த டெஸ்ட் பந்துவீச்சாளருக்கான விருதுக்கு அஸ்வினும், ஒருநாள் போட்டிகளுக்கான பந்துவீச்சாளருக்கு ரவீந்திர ஜடேஜாவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
விருதுக்கு தேர்வானவர்கள் விவரம் இந்த ஆண்டு இறுதியில் அறிவிக்கப்படும்.
இவர்களை ராகுல் டிராவிட் மற்றும் இயன் சப்பல் உள்ளிட்டோர் அடங்கிய உயர்மட்டக் குழு தேர்வு செய்யும். சிறந்த அறிமுக வீரருக்கான விருதை கிரிக்கெட் ரசிகர்கள் தெரிவு செய்வர்.





