
பிபா உலக கிண்ணத்தில் விளையாடுவதற்கு கனடாவை சேர்ந்த 12 வயது சிறுமி தெரிவுசெய்யப்பட்டுள்ளார். கனடாவில் தலைநகர் ஒட்டாவாவில் சிறு வயது முதல் வசித்து வருபவர் கார்மேன் மாரின். இவரின் தந்தை கோஸ்டாரிக்காவை சேர்ந்தவர்.தாய் கனடாவை சேர்ந்தவர்.
இவர் தன் இளம் வயது முதல் கால்பந்தாட்டத்தில் அதிக ஆர்வம் கொண்டவர். இதனால் பள்ளி நேரம் தவிர்த்து மற்ற நேரங்களில் கால்பந்தாட்டத்தின் நுணுக்கங்கங்களை அறிந்து அதில் பயிற்சி பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில் கோஸ்டாரிக்கா U-17 என்ற கால்பந்து அணியில் தெரிவு பெற்றிருக்கும் இவர் வரும் மார்ச் 15ம் திகதி முதல் ஏப்ரல் 4ம் திகதி வரை பிபா உலக கிண்ணத்தில் விளையாடவுள்ளார்.
இதுகுறித்து மாரின் கூறுகையில், கால்பந்து என்பது என் குழந்தைபருவ கனவு.எனவே கனடா அல்லது கோஸ்டாரிக்கா ஆகிய இரு நாடுகளில் ஏதேனும் ஒரு நாட்டின் சார்பில் விளையாட வேண்டும் என்று விரும்பினேன்.
என் வயது காராணமாக கனடா கால்பந்து விளையாட்டு துறை என்னை நிலுவையில் வைத்துள்ளது என்றும் இதற்கு தான் வருதப்படவில்லை என்றும் கனாடவின் U-20 கால்பந்து அணியுடன் போட்டியளிப்பது பெருமை அளிக்கிறது எனவும் கூறியுள்ளார்.
மேலும் மாரினின் பயிற்சியாளர் சஞ்சீவ் பரமர் கூறுகையில், மாரின் கால்பந்தில் மிகுந்த திறமைசாலி என்றும் அவர் உலக கிண்ண கால்பந்து போட்டியில் பங்கேற்க அனைத்து தகுதிகளையும் உடையவர் என தெரிவித்துள்ளார்.





