கனேடிய அமைச்சரவையில் முதலாவது தமிழ் அமைச்சராக அனிதா ஆனந்த்!!

491

அனிதா ஆனந்த்

தமிழர் பாரம்பரியத்தின் பின்னணி கொண்ட முதலாவது அமைச்சர் கனடாவில் நியமிக்கப்பட்டுள்ளார்.

நேற்று (புதன்) பதவியேற்ற பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் அமைச்சரவையில் ஓக்வில் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனிதா ஆனந்த் பொது சேவைகள் மற்றும் கொள்முதல் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த பொதுத் தேர்தலில் வெற்றிபெற்றதன் மூலம் முதல் தடவையாக நாடாளுமன்ற உறுப்பினராகியுள்ள இவர், டொராண்டோ பல்கலைக்கழகத்தில் சட்ட பேராசிரியராக கடமையாற்றியவராவார்.

வைத்தியர் சுந்தரம் விவேகானந்த் ஐயரின் புதல்வியான இவர் இந்தியாவின் தமிழ்நாடு வேலூரை குடும்பப் பின்னணியாகக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.