வவுனியா ஓமந்தையில் வெ டிபொருட்கள் மீட்பு!!

449

வவுனியா ஓமந்தையில்..

வவுனியா – ஓமந்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதர் பனிக்கர், மகிழங்குளம் பகுதியில் பழுதடைந்த நிலையில் வெ டிபொருட்களை மீட்டுள்ளதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்றைய தினம் குறித்த பகுதியில் உள்ள தனியார் காணியினை சுத்தம் செய்த காணியின் உரிமையாளர் மண்ணில் புதையுண்ட நிலையில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் இருப்பதை அவதானித்து ஓமந்தை பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

இதன்போது சம்பவ இடத்திற்கு விஜயம் செய்த பொலிஸார் பா துகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதுடன், நீதிமன்ற உத்தரவினை பெற்று இன்றையதினம் அவற்றை அகற்றவுள்ளதாக தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியில் இருந்து மூன்று மகசின்கள் மற்றும் ஒரு கைக்கு ண்டு ஆகியன பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.