இரட்டை பொங்கல் கொண்டாடும் காஜல் அகர்வால்!!

549

Kajal

இந்த வருடம் இரட்டைப் பொங்கல் கொண்டாடவிருக்கிறாராம் காஜல் அகர்வால். விஜய்யுடன் ஜோடி சேர்ந்திருக்கம் ஜில்லா படம் இந்தப் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 10ம் திகதி வெளியாகிறது.

அதேபோல தெலுங்கில் ராம்சரண் நடித்து ஜனவரி 12ம் திகதி வெளியாக இருக்கும் எவடு படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கிறார் காஜல்.

ஸ்ருதிஹாசன், எமி ஜாக்சன் ஆகியோர் தான் கதாநாயகிகள் என்றாலும் தானும் நடித்திருப்பதால் படத்தின் ரிலீஸை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளாராம். அத்துடன் படங்களை திரையரங்கில் மட்டுமே போய் பார்க்கவேண்டும் என்று ரசிகர்களுக்கு அன்பு வேண்டுகோளும் விடுத்துள்ளார் காஜல்.